சிங்கப்பூர் TOTO லாட்டரியில் ChatGPT பயன்படுத்தி வென்று ஆச்சரியப்படுத்திய ஆடவர்

Singapore TOTO use Chatgpt tricks
@8_aron

ChatGPT Chatbot தளத்தை பயன்படுத்தி ஆடவர் ஒருவர் சிங்கப்பூர் TOTO லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மனித வேலைகளுக்கு மாற்றாக வருமா? என்ற கேள்வி விவாதத்திற்குரியதாக இருந்து வரும் சூழலில் இந்த வெற்றி நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

S$400 வெள்ளி கொடுக்கும் சிங்கப்பூர் அரசு… நீங்கள் தகுதியுடையவரா? செக் பண்ணிக்கோங்க

சிங்கப்பூரர் ஒருவர் சமீபத்தில் ChatGPT ஐப் பயன்படுத்தி TOTO லாட்டரியில் சிறிய தொகையை வென்றுள்ளார்.

டிக்டாக் பயனரான ஆரோன் டான் என்பவர், லாட்டரியில் தனக்காக ஏழு எண்களை உருவாக்குமாறு ChatGPTயிடம் கேட்ட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

“தயவுசெய்து எனக்கு 1 முதல் 49 வரையிலான ஏழு எண்களை தாருங்கள்” என்று அவர் அந்த AI Bot இடம் கேள்வி எழுப்பினார், அதற்கு ChatGPT ஏழு சீரற்ற எண் வரிசை பதிலாக சொன்னது.

அது சொன்ன அந்த அதிஷ்ட எண்களை பயன்படுத்தி அவர் TOTO லாட்டரியை வாங்கியுள்ளார். அது S$2,400,000 என்ற பரிசுக்கான மெகா குலுக்கல் டிக்கட் ஆகும்.

அதில் அவருக்கு கிடைத்த ஆச்சரியம் என்னவென்றால், அவர் வாங்கிய ஏழு எண்களில் மூன்று எண்கள் அப்படியே பொருந்தியது.

TOTO லாட்டரியில் மூன்று எண்கள் சரியாக இருந்தால் $50 வெள்ளி பரிசாக கிடைக்கும்.

சிறிய தொகையாக இருந்தாலும் அவர் அதை வென்றதில் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.