சிங்கப்பூருக்கு 2021இல் 330,000 சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை – 2ம் இடத்தில் இந்திய பயணிகள்

Scribbling Geek via Unsplash

கடந்த 2021ஆம் ஆண்டில், சிங்கப்பூருக்கு சுமார் 330,000 சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதே ஆண்டில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் செலவு சுமார் S$1.9 பில்லியன் பதிவானதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் போலீஸ் அதிரடி நடவடிக்கை: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேர் சிக்கினர்

ஆனால், அதற்கு முந்தைய 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், சிங்கப்பூருக்கு 2.4 மில்லியன் சர்வதேச பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதே 2020இல் ஒட்டுமொத்தமாக, சர்வதேச பயணிகளின் வருகை 2.7 மில்லியனாக இருந்தது, அவர்களின் செலவு S$4.8 பில்லியன் எட்டியது.

இருப்பினும், தடுப்பூசி பயண ஏற்பாடுகள் (VTL) போன்ற பல்வேறு பயண ஏற்பாடுகளின் அறிமுகம் சர்வதேச பயணிகளின் மீண்டும் படிப்படியான சிங்கப்பூர் வர ஊக்கப்படுத்தியது.

2021இல் அதிகம் சிங்கப்பூர் வந்த முதல் மூன்று நாடுகளின் விவரம்

  • சீனா – 88,000 பேர்
  • இந்தியா – 54,000 பேர்
  • இந்தோனேசியா – 33,000 பேர்

2021ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் இடையில், சீனா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவிலிருந்து முறையே S$432 மில்லியன், S$127 மில்லியன் மற்றும் S$58 மில்லியன் பயணிகளின் செலவு பதிவாகியுள்ளது.

சீனப் புத்தாண்டு, காதலர் தினத்தில் “நாங்கள் வாடகைக்கு” கிடைப்போம் – களம் இறங்கும் சிங்கப்பூர் டிக்டாக்கர்ஸ்!