சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி 1 முதல் TraceTogether கருவி மீண்டும் விநியோகம்

Singapore TraceTogether tokens
(Photo: Smart Nation Singapore/Facebook)

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை முதல், 108 சமூக நிலையங்கள் மற்றும் மன்றங்களில் (CCs) பொதுமக்கள் தங்கள் TraceTogether கருவியை பெற்றுக்கொள்ளலாம்.

அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம் (The Smart Nation and Digital Government Office) இதனை பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

3 நாடுகளுடன் இருவழி பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சிங்கப்பூர்

அந்த கருவி சரியாக செயல்படவில்லை அல்லது பேட்டரி தீர்ந்துவிட்டால், பொதுமக்கள் ஏதேனும் மன்றத்திற்கு சென்று அதை மாற்றி கொள்ளலாம்.

அதாவது அதில் ஒளிரும் சிவப்பு விளக்கு விட்டுவிட்டு எரிந்தால் அல்லது சிவப்பு ஒளி நின்றுபோனால் அதனை மாற்றிவிட வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முறை ஒளிரும் பச்சை விளக்கு எரியும், அதன் பொருள் உங்கள் கருவி நன்றாக வேலை செய்கிறது என்று அரசாங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பொதுமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்கள் மற்றும் அவர்களின் சொந்த தொகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் கருவிகளை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த திட்டத்தின்கீழ், இன்றுவரை 2.6 மில்லியனுக்கும் அதிகமான கருவிகளை பொதுமக்கள் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகளைக் அடையாளம் கண்டறிய முடியும்.

மேலும் இதனால் சமூகத்தில் கிருமித்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும், மேலும் விரைவாக அடையாளம் காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்படவும் முடியும்.

சிங்கப்பூரில் போதை ஒழிப்பு நடவடிக்கையின் போது 2 சந்தேக நபர்கள் கைது