சிறப்பானது நம்ம சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்துச் சேவைதான்! – உலகிலேயே நான்காவது இடத்தைப் பிடிப்பது சும்மாவா?

mrt singapore -pc;mothership.sg
சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து அமைப்பு உலகிலேயே நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.ஹாங்காங், சூரிச் மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற நாடுகள் முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.
நகர்ப்புற இயக்கம் தயார்நிலை மற்றும் பொதுப் போக்குவரத்தில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ள சிங்கப்பூர், நிலையான 6-வது இடத்தைப் பெற்றுள்ளது.குறைந்த கட்டணங்கள்,தாமதமின்றி போக்குவரத்துச் சேவை போன்றவற்றிற்காக ஹாங்காங் முதலிடத்தைப் பிடித்தது.
பல பகுதிகளில் கார்களை அனுமதிக்காததற்காக ஹாங்காங் பாராட்டுக்களைப் பெற்றது.ஒஸ்லோவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களின் வலையமைப்பு உள்ளது.ஒஸ்லோ, ஹெல்சின்கி மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற ஸ்காண்டிநேவிய நகரங்கள் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மைக்கு உயர்ந்த தரவரிசையில் உள்ளன.
சிங்கப்பூர் எப்பொழுதும் பொதுப் போக்குவரத்தில் பல வருடங்களாக உயர்ந்த நிலையில் உள்ளது.சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகள் S$10க்கு கார்டு பாஸை வாங்கி,ஒரு நாளில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ளக் கூடும்.
மின்னணுச்சேவைகள் சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்தைத் தனித்து நிற்கச் செய்கிறது.மலிவான கட்டணத் தொகையில் பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்குவதாக சிங்கப்பூர் பாராட்டப்பட்டது.
2030 ஆம் ஆண்டுக்குள் 10 குடும்பங்களில் எட்டு பேர் ஒரு ரயில் நிலையத்தை 10 நிமிடங்களில் சென்றடையும் அளவிற்கு ரயில் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.