சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் புதிய நடைமுறை – 2024 முதல் அமல்

automated-immigration-lanes for foreigners pr
Joshua Lee

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் போது வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்துப் பயணிகளும் இனி பாஸ்ப்போர்ட்டை காட்ட தேவையில்லை.

இந்த நடைமுறை அடுத்த 2024 ஆம் ஆண்டு முதல் நடப்புக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“லாரி பயணத்தை தடை செய்தால் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம்” – எச்சரிக்கும் அரசாங்க அமைப்புகள்

அதற்குப் பதிலாக, பயணிகளின் டிஜிட்டல் அடையாளம் மற்றும் செல்லும் விமானத்தின் தகவல்களை கொண்டு தனித்துவம் வாய்ந்த ஒரு டோக்கன் உருவாக்கப்படும் என்று MHA தெரிவித்துள்ளது.

Bag-drop, இமிக்ரேஷன் மற்றும் போர்டிங் போன்ற பல தானியங்கி சோதனைச் சாவடிகளில் பயணிகளின் அடையாளம் மற்றும் விமான விவரங்களைச் சரிபார்க்க அது பயன்படும்.

அதாவது, விமான நிலையத்தில் பயணி ஒருவரின் புறப்பாடு அனுமதி என்பது மனித ஈடுபாடு இல்லாமலும், தானியங்கி முறையிலும் இருக்கும்.

இந்த குடிநுழைவு சட்ட திருத்த மசோதா நேற்று ஆகஸ்ட் 2, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசபின் தியோ அதனை அறிமுகம் செய்தார்.

அதே போல, சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் பயணிகளைப் பற்றிய தகவல்களைப் பெறவும், அதனை மதிப்பீடு செய்யவும் ICA அதிகாரிகளுக்கு இந்த மசோதா கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோருக்கு வேலை: ஓட்டுனர்களுக்கு வரப்பிரசாதம்!