சிங்கப்பூர் பயணிகள் கவனத்திற்கு – உங்கள் பயணத்தை மேலும் இலகுவாக்கும் நடவடிக்கை

singapore travel update
(Photo: India in Singapore/Twitter)

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு அரசாங்கம் செய்துள்ள மாற்றங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இனி நீண்ட கால அனுமதி மற்றும் குறுகிய கால வருகையாளர்கள் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கத் வேண்டியதில்லை, அதாவது 13 வயதுக்கு மேற்பட்ட பயணிகளுக்கு இது பொருந்தும்.

இந்த புதிய நடைமுறை வரும் ஆகஸ்ட் 29 முதல் நடப்புக்கு வரும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

  • அவர்களுக்கு 7 நாட்கள் SHN தனிமை இனி இருக்காது.
  • SHN முடிவில் மேற்கொள்ளப்படும் PCR சோதனையும் இனி இருக்காது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு…

முழு தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரு நாட்களுக்குள் COVID இல்லை என்ற நெகடிவ் முடிவை சமர்ப்பிக்க வேண்டும்

குறுகிய கால வருகையாளர்கள் கோவிட்-19 பயணக் காப்பீட்டை கட்டாயமாக வாங்க வேண்டும்.

காணாமல் போன பங்களாதேஷ் தொழிலாளர் இன்று சடலமாக மீட்பு! – அடுத்தடுத்து நிகழும் பணியிட விபத்துகளும் மரணங்களும்

தொற்று உறுதி செய்யப்பட்டால்?

தொற்று உறுதி செய்யப்பட்டால், நெகடிவ் முடிவை பெறும்வரை காத்திருக்க வேண்டும்.

குறிப்பாக முதலில் தொற்று உறுதிசெய்யப்பட் நாளில் இருந்து குறைந்தது 72 மணிநேரத்துக்கு பிறகு மட்டுமே நீங்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவீர்கள்.