சிங்கப்பூரில் இருந்து சீனா செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

Photo: Changi Airport

சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம் (Chinese embassy in Singapore) நேற்று (மார்ச் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு செல்லும் பயணிகள் இனிமேல் கொரோனா இல்லை என்பதற்கான பிசிஆர் (PCR) பரிசோதனை நெகட்டிவ் முடிவைக் காட்டத் தேவையில்லை. விமான பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு சீனா செல்லும் சிங்கப்பூரர்கள் தங்கள் வீட்டில் இருந்த படியே ஏஆர்டி கருவி (ART) மூலம் பரிசோதனை மேற்கொள்ளலாம். கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் என்ற ஏஆர்டி முடிவைக் காட்டினாலே போதுமானது.

வேலை அனுமதியின்கீழ் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – செப்.1 முதல் அமல்

சிங்கப்பூரில் இருந்து சீனா செல்லும் அனைவரிடமும் கொரோனா நெகட்டிவ் முடிவைக் கேட்பதில்லை. ரேண்டம் முறையில் மட்டுமே பயணிகளிடம் கேட்கப்படுகிறது. எனவே, சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு செல்லும் பயணிகள் தங்களது கைபேசியில் சீன சுங்கத்துறையின் செயலியைப் பதிவிறக்கம் செய்து, சுகாதார உறுதிமொழிப் படிவத்தைத் திறந்து ஏஆர்டி பரிசோதனை முடிவை அதில் குறிப்பிட்டு சமர்பிக்க வேண்டும் (அல்லது) இணையதளம் வாயிலாகவும் விவரத்தைக் குறிப்பிட்டு படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.

சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதால், சிங்கப்பூரில் இருந்து சீனாவிற்கும், சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கும் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) மற்றும் அந்த குழுமத்திற்கு சொந்தமான ஸ்கூட் (Flyscoot) விமான நிறுவனங்கள், சிங்கப்பூர் மற்றும் சீனா இடையே அதிகளவில் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளன.

பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம்: சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்களில் புதிய நடைமுறை

ஏஆர்டி பரிசோதனை முடிவே போதுமானது என்பதால், வரும் நாட்களில் சீனாவுக்கு பயணிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.