சிங்கப்பூரில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 19 வயதான இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு!

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

சிங்கப்பூரில் கடந்த 2017 – 2020ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு ஆடவர்கள் பல நாட்டு வெடிபொருள்களைத் தயாரித்து அவற்றை வெடிக்க செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த இரு ஆடவர்களில், ஒருவர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர், இவர் மீது ஏழு குற்றச்சாட்டுகளும், முழுநேர தேசியச் சேவையாளரானா மற்றொரு ஆடவர் மீது ஆறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசிய சிங்கப்பூர் பிரதமர்!

19 வயதான அந்த இரு ஆடவர்கள் மீதும் ஆயதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின்கீழ், தற்போது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர்கள் இருவரும் ஒரு குழாய் வெடிகுண்டைத் தயாரித்து, அதனை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் வெடிக்கச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின்கீழ், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியருக்கு மரண தண்டனை விதித்த சிங்கப்பூர் உச்சநீதிமன்றம் – அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்