சிங்கப்பூரில் தொடர்ந்து குறைந்து வரும் வேலையின்மை விகிதம்!

(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

கடந்த 2021 நவம்பர் மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2021 நவம்பர் மாத வேலையின்மை தரவுகளின்படி, குடியிருப்போர் வேலையின்மை 3.2 சதவீதமாக குறைந்துள்ளது, இது முந்தைய மாதத்தில் 3.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் S$1,500 வரை ஊதியம் பெறும் சில “Work permit” பணியாட்கள் – அவர்களுக்கு மட்டும் என்ன சலுகை?

அதே போல சிங்கப்பூர் குடிமக்களின் வேலையின்மை 3.5 சதவீதமாக இருந்தது, முன்பு இது 3.6 சதவீதமாக இருந்தது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.6 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்த தொடர் சரிவு சிங்கப்பூரின் ஊழியர் சந்தை நிலையாக மீண்டு வருவதைக் குறிக்கிறது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை