இன்று (டிச. 7) முதல் VTL விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய நடைமுறை

singapore visa removed

இன்று (டிச. 7) முதல் தடுப்பூசி போடப்பட்ட பயண ஏற்பாடுகளின்கீழ் (VTL) விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளும், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) எடுக்க வேண்டும்.

கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவலுக்கு மத்தியில், சிங்கப்பூரில் சோதனை நடைமுறை தீவிரப்படுத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த 24 பேர் தனிமை – தீவீர கண்காணிப்பு

அதாவது, புறப்படுவதற்கு முந்தைய சோதனை, வருகையின்போது PCR சோதனை, அத்துடன் மேற்பார்வையின்கீழ் ART விரைவு சோதனைகளை 3 மற்றும் 7ஆம் நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்பது முந்தைய நடைமுறை.

அதனை அடுத்து, கடந்த டிசம்பர் 3 அன்று சுகாதார அமைச்சகம் (MOH) VTL பயணிகளுக்கான சோதனை முறையைப் புதுப்பித்தது.

அதில் கூறியதாவது: விமானம் மற்றும் நிலம் ஆகிய இரண்டின் வழியாக, டிசம்பர் 7ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து VTL பயணிகளும் தினசரி ஏழு நாட்களுக்கு ART சோதனை மேற்கொள்வது கட்டாயம் என அமைச்சகம் அறிவித்தது.

அனைத்து VTL பயணிகளும் மேற்கொள்ள வேண்டியவை:

சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு 2 நாட்களுக்குள் (pre-departure test) மேற்கொள்ளப்படும் சோதனை

சிங்கப்பூர் வந்தவுடன் ஆன்-அரைவல் என்னும் வருகையின்போது PCR சோதனை

3 மற்றும் 7 நாட்களில் ஒருங்கிணைந்த சோதனை நிலையம் அல்லது விரைவு சோதனை நிலையத்தில் மேற்பார்வையின்கீழ் ART சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

2, 4, 5 மற்றும் 6ஆம் நாட்களில் சுயமாக ART சோதனை மேற்கொள்ள வேண்டும்.

பயணிகள் தங்கள் சுயமான சோதனை முடிவுகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களாக 14 வயது சிறுமியை காணவில்லை – தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள்