உத்தரபிரதேசத்தில் அதிக முதலீடு செய்யும் சிங்கப்பூர் – இந்திய வளர்ச்சிக்கு உதவும்!

(Photo by @MEAIndia)

வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சிங்கப்பூர் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.

அதில் குறிப்பாக நகர்ப்புற மேம்பாடு மற்றும் திறன் பயிற்சி உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சிங்கப்பூர்-இந்தியா: PCR தேவையில்லை.. பயணிகளுக்கு இன்பச் செய்தி – ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் தலைநகர் லக்னோவில் நடைபெறும் உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டென்மார்க் மற்றும் ஜப்பான் போன்ற பிற நாடுகளும் பங்கு கொண்டன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, மாநிலத்தில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுப்படுத்த உதவும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த உச்சிமாநாட்டில், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் உள்ளிட்ட 21 நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிரடி மாற்றங்கள் – மார்ச் 1 முதல்…