காதலர் தினம்: தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி குறைவு!

(PHOTO: Reuters)

காதலர் தினம் + ரோஜா பூ இரண்டையும் வேறுவேறாக பிரித்து பார்க்க முடியாது. காலம் காலமாக காதல் என்றாலே அதற்கு ரோஜா தான் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது, வருடத்தின் ஒரு நாளில் மட்டும் ரோஜா பூவின் தேவை மிக அதிகமாக இருக்கும்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி, மதுரை- சென்னை விமானத்தில் 200க்கு மேற்பட்டோர் பயணம்!

தமிழகத்தில் பயிரிடப்படும் ரோஜாப்பூக்களுக்கு மொவுசு அதிகம். காதலர் தினத்திற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பயிரிடப்படும் “ரோஜா” உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் நிலவும் குளிர்ச்சியான நிலை காரணமாக சுமார் 800 ஏக்கரில் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த ரோஜா மலர்கள், சிங்கப்பூர், மலேசியா, UAE, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு கொரொனா காரணமாக ரோஜா சாகுபடியும், ஏற்றுமதியும் குறைந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சோதனைக்கு நிற்க மறுத்து விரைந்த வாகனம்..பாதசாரியை மோதி விபத்து – ஒருவர் கைது