சிங்கப்பூரில் நாம் வீராசாமி ரோட்டிற்கு சென்றிருப்போம், யார் அந்த வீராசாமி?? – ஒரு சிறப்பு பார்வை !!

Do you know about veerasamy Road?

சிங்கப்பூர், சிராங்கூன் வட்டாரத்திற்குப் போகும்போது வீராசாமி சாலையை நாம் பார்த்திருப்போம், கடந்து சென்று இருப்போம் அல்லது கேள்வியாவது பட்டிருப்போம், யார் அந்த வீராசாமி என்ற கேள்வி நம் ஆழ் மனதில் இருந்துகொண்டே இருக்கும். ஆம் அதற்கான விடையை தற்போது காண்போம்.

சிங்கப்பூரின் முதல் உள்ளூர் இந்திய மருத்துவர்களில் ஒருவராக டாக்டர் N.வீராசாமி 1864ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். அவரின் நினைவாக 1927ஆம் ஆண்டு சாலைக்கு வீராசாமி ரோடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்னர், அந்தச் சாலை ஜாலான் தம்பா என்று அழைக்கப்பட்டது.

லிட்டில் இந்தியா வட்டாரத்தில், இரண்டு சாலைகளுக்கு மட்டுமே பிரபலமான தமிழர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று வீராசாமி ரோடு. மற்றொன்று சந்தர் ரோடு.

1920களுக்கு முன்னர், சிங்கப்பூரில் வெகுசில மருத்துவர்களே இருந்தனர். அவர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பியர்கள். உரிமம் பெற்ற முதல் உள்ளூர் இந்திய மருத்துவர்களில் ஒருவராக டாக்டர் N. வீராசாமி தனித்து விளங்கினார். ரோச்சோர் ரோட்டில் அவருடைய மருத்தகம் அமைந்திருந்தது.

தகவல்: சமூக ஊடகங்கள்