இனி சிங்கப்பூரில் இவ்ளோ வெள்ளி செலுத்தித்தான் வாகன உரிமைச் சான்றிதழ் பெற முடியும்! – இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்ட கட்டணம்

singapore road

சிங்கப்பூரில் வாகன உரிமத்திற்கான கட்டணம் வாகனங்களின் அடிப்படையில் வசூலிக்கப்படுகின்றன.தற்போது வாகன உரிமக் கட்டணங்கள் மூன்று பிரிவுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளன.

பெரிய கார்களுக்கான உரிமக் கட்டணம்,கடந்த செப்டம்பர் மாதம் 113,000 வெள்ளியாக இருந்தது. ஆனால்,இப்போது புதிய உச்சமாக சுமார் 115,390 வெள்ளி வசூலிக்கப்படுகிறது.

பொதுப் பிரிவில் கடந்த ஜூலை மாதம் 114,000 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்பட்டது.ஆனால்,தற்போது 116, 500 வெள்ளியைத் தாண்டியது. நான்கு சக்கர வாகனத்திற்குத்தான் இப்படியென்றால் இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கும் கட்டணம் சுமார் 13,190 வெள்ளி வசூல் செய்யப்படுகிறது.

இந்தக் கட்டணம் 12 ஆவது முறையாகக் கூடியது.கடந்த மாதம் அதிகரித்த கட்டணத்தை விட அது ஏறக்குறைய 390 வெள்ளி அதிகம் ஆகும்.

சிறிய கார்களுக்கான கட்டணமும் உயர்ந்து தற்போது 87,235 வெள்ளி வசூலிக்கப்படுகிறது.76, 300 வெள்ளி வசூல் செய்யப்பட்டு சரக்கு வாகனத்திற்கான உரிமம் வழங்கப்படுகிறது.