இனி சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து செல்ல முடியாது – விசா அனுமதியை நீக்கிய நாடு

singapore visa removed

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இனி எங்கள் நாட்டுக்கு விசா இல்லாமல் வர முடியாது என்று தைப்பே கூறியுள்ளது.

விசா இல்லாமல் அனுமதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இருந்து அவ்விரு நாடுகளையும் தைப்பே நீக்கியுள்ளது.

சிங்கப்பூர் மட்டுமல்லாமல், வேறு சில நாடுகளையும் தைப்பே பட்டியலில் இருந்து தூக்கியுள்ளது.

நேற்று செப்டம்பர் 6 ஆம் தேதி, இஸ்ரேல், சிலி, தாய்லாந்து, புரூணை, பிலிபைன்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் அந்த பட்டியலிலிருந்து தற்காலிகமாய் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கான காரணம் என்ன என்பதை தூதரக இணையத்தளத்தில் கூறப்படவில்லை.