சிங்கப்பூரில் இந்தியர்களால் அதிகரிக்கும் ஹோட்டல் வருவாய் – எப்படி சாத்தியமானது? தெளிவா விளக்கும் புள்ளிவிவரம்!

சிங்கப்பூரில் கோவிட்-19 பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.  சிங்கப்பூர்-மலேசிய எல்லைகள் மீண்டும் திறக்கத் தொடங்கியதால், சிங்கப்பூரின் சர்வதேச பயணிகளின் வருகை பிப்ரவரியில் அதிகரித்தது.

சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் (STB) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரியில் சுமார் 67,760 பார்வையாளர்கள் வந்துள்ளனர். முந்தைய மாதத்தில் 57,170 பார்வையாளர் வந்தனர். இது 18.5 சதவீதம் அதிகம்.

சமீபத்திய சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் இதே மாதம்  18,140 ஆக இருந்தது.  ஆனால் கொரோனாவுக்கு முன்பு, ஜனவரி 2020ல் 16 லட்சம் பேர் வருகை புரிந்தனர்.

ஜனவரியில் ஹோட்டல் வருமானம் S$101.7 மில்லியன்  என்ற அளவில் இருந்தது. இருப்பினும் தொற்றுநோய்க்கு முன் பதிவுசெய்யப்பட்ட S$328.9 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர் வருகை புரிந்த இந்தியவர்களின் எண்ணிக்கை 11,430 ஆக இருந்த நிலையில், பிப்ரவரியில் 15,570 ஆக மாறியுள்ளது. சிங்கப்பூரின் சுற்றுல்லா சந்தைகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

பிப்ரவரி மாதப் பயணிகளில் பெரும்பாலோர் அருகில் உள்ள நாடுகளிலிருந்தும் சிங்கப்பூருக்கு தனிமைப்படுத்தப்படாத தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை வழியாக வந்துள்ளனர்.

அதில் இந்தோனேசியா (6,870), ஆஸ்திரேலியா (4,550) மற்றும் மலேசியா (4,470) என்ற அளவில் உள்ளது.

தொற்றுநோய்க்கு முந்தைய வருகையின் மிகப்பெரிய ஆதாரமாக இருந்த சீனா, பிப்ரவரி பயணிகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. வெறும் 3,820 சீன நாட்டினர் மட்டுமே சிங்கப்பூர் வந்தனர்.

சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கை சிங்கப்பூர் சுற்றுலாத் துறையை கோவிட்-க்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுப்பதைத் தடுக்கலாம். ஏனெனில் சீனாவிலிருந்து வெளிச்செல்லும் பயணம் குறைவாகவே இருக்கும்.