சிங்கப்பூரின் பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்; இந்திய பயணிகள் மகிழ்ச்சி!

(PHOTO: Dhany Osman/Yahoo News Singapore)

எல்லை தாண்டிய பயண கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் இன்று வியாழக்கிழமை (மார்ச் 24) தெரிவித்தார்.

கிட்டத்தட்ட கோவிட்-19 சூழலுக்கு முன்பு இருந்ததை போலவே சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை பிரதமர் லீ சுட்டிக்காட்டினார்.

Breaking: ஊழியர்களில் 75 சதவீதம் பேர் தங்கள் வேலையிடங்களுக்கு திரும்ப அனுமதி!

தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்படாமல் பயணிக்க அனுமதிக்கும் தடுப்பூசி பயண ஏற்பாடு (VTL) எளிமைப்படுத்தப்படும்.

மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான பெரும்பாலான பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

திரு லீ, பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளின் தளர்வுடன், எல்லை நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்து தெரிவித்தார்.

VTL திட்டம் இந்தியாவிற்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது, ஆகவே இந்திய நாட்டுக்கும் கட்டுப்பாடுகளை பெரிய அளவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் “வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது விருப்பத் தேர்வாக மாறும்” – பிரதமர் லீ!