சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கை!

singapore tourism

அத்தியாவசிய தேவை இல்லை என்றால் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டது.

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் பயண ஆலோசனையை விடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள சிங்கப்பூர் மக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான எல்லா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களும் அதிகமான மக்கள் கூட்டங்கள் இருக்கும் பொது இடங்களை தவிர்க்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள சிங்கப்பூர் மக்கள் செய்திகளை கூர்ந்து கவனித்து உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளின்படி நடக்க வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.

வெளியுறவு அமைச்சகத்தில் இன்னமும் பதிவு செய்திருக்காவிட்டால் உடனே செய்யும்படி அமைச்சு கூறியது.

பதிவு செய்ய வேண்டிய முகவரி: https://eregister.mfa.gov.sg/

தூதரக உதவி தேவைப்படுபவர்கள், கொழும்பில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தை நாடலாம். அல்லது வெளியுறவு அமைச்சின் 24 மணிநேர பணி அலுவலகத்தை அழைக்கலாம்.

தொடர்பு விவரங்கள்:

கொழும்பில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்
தொலைபேசி: +94-11-5577300, +94-11-2304444, +94-11-5577111
மின்னஞ்சல்: nawaloka@slt.lk
வெளியுறவு அமைச்சின் பணி அலுவலகம் (24 மணிநேரம்)
தொலைபேசி: +65 6379 8800 / 8855
மின்னஞ்சல்:: mfa_duty_officer@mfa.gov.sg