சிறுவர்களை அதிகம் தாக்கும் கொரோனா

இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் போன்ற மரபணு மாற்ற வைரசுகள் குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதால், பெரும்பாலான பள்ளிகளை மூட சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படும்.அத்துடன் சிறு வயதினருக்கு தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பி.1617 மரபணு மாற்ற வைரஸ் சிறார்களை அதிகமாக பாதித்துள்ளது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் ((Ong Ye Kung)) தெரிவித்தாலும், எத்தனை பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதர ஆசிய நாடுகளை விட சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைவக இருந்த நிலையில், இப்போது அது அதிகரிக்க துவங்கி உள்ளதால், அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.