இது மட்டும் இல்லையென்றால் என்ன ஆயிருக்கும்? சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தபோது போடப்பட்ட 999 வருட ஒப்பந்தம்!

சிங்கப்பூரின் நீர் மேலாண்மை குறித்து, இங்கே பணியாற்றிவரும், விக்னேஸ்வரன் ராஜா தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூரின் நீர் மேலாண்மை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மொத்தம் நான்கு வகையான நீர் ஆதாரங்க ளை சிங்கப்பூர் கொண்டுள்ளது.

அவை:-

மலேசியாவிலிரந்து ராட்சத குழாய் வழியாக வரும் நீர்.
மழை நீர் ஆதாரம்.
பயன்படுத்தப்பட்ட நீர் மறுசுழற்சி.
கடல்நீர் சுத்திகரிப்பு.

மலேசியாவில் இருந்து ராட்சத குழாய் மூலமாக வரும் நீரானது சிங்கப்பூரின் முதல் நீர் ஆதாரமாக விளங்குகிறது.

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலிருந்து மூன்று பெரிய வெள்ளை நிற ராட்சத குழாய்களின் மூலம் சிங்கப்பூர் நீரை பெறுகிறது இவை சிங்கப்பூர் பிரிந்த பொழுது மலேசியாவுடன் செய்யப்பட்ட 999 வருட ஒப்பந்தத்தின் படி தினமும் நீரானது தங்குதடையின்றி ஒவ்வொரு நாளும் பல லட்சம் லிட்டர் சிங்கப்பூர் பெறுகிறது.

இந்த மூன்று குழாயில் இரண்டு குழாய் வழியாக மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சுத்திகரிக்கப் படாத நீர் அணையில் இருந்து நேரடியாக பெறப்படுகிறது, இந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி நீர் மூன்றாவது குழாய் வழியாக மலேசியாவிற்கு திரும்ப விற்கப்படுகிறது இது சிங்கப்பூரின் சிறந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டுள்ளதை காட்டுகிறது.

அடுத்து சிங்கப்பூர் அதிக அளவு மழைப்பொழிவை பெற்றுள்ளதால் மழை நீரானது Water reservoir எனப்படும் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு கால்வாய் வழியாக கொண்டு சேர்க்கப்பட்டு சேமிக்கப்படுகிறது இந்த நீரும் சுத்திகரிக்கப்பட்டு மக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.