சிங்கப்பூரில் இந்த மாதம் முதல் கனத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடும் – சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம்

Mothership

சிங்கப்பூரில் சமீப காலமாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூரில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் ,பசிபிக் பெருங்கடல் வட்டாரங்களில் ஏற்படும் வானிலை மாற்றத்தால் சிங்கப்பூரின் வான்வெளியில் அதிகமான மழை மேகங்கள் உருவாகும் என்று அது கூறியது.

பசிபிக் பெருங்கடலில் இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘லா நானா’ நிகழ்வு ஏற்படும்.இந்நிகழ்வினால் தென்கிழக்காசியாவில் அதிக அளவிலான மழை மற்றும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.இந்த முறை ‘லா நானா’ 2020-லிருந்து நீடிக்கிறது.

“Indian ocean dipole negative face” எனப்படும் நிகழ்வினால் நிலநடுக் கோட்டிலிருந்து தென்கிழக்காசியா,ஆஸ்திரேலியா ஆகிய வட்டாரங்கள் வரை காற்று வலிமையடைந்து கடல்நீர் வெப்பமடைவதுடன் அதிகமான மழை மேகங்கள் உருவாகும்.

2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவதாக சென்ற ஆண்டு அதிக மழை பெய்ததாக ஆய்வகம் முன்பு தெரிவித்திருந்தது .இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் மற்றொரு வானிலை நிகழ்வு மழை அதிகமாக பெய்வதற்கான இரண்டாவது காரணமாகும்.

எனவே, சிங்கப்பூரில் இம்மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சராசரி அளவுக்கும் அதிகமான அளவு மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வானிலை நிகழ்வுகளால் சிங்கப்பூரின் வெப்பநிலை அதிகம் பாதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.உலக வெப்பமயமாதலால் பருவநிலை பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.