சிங்கப்பூரில் தொடங்கிய மழை – ஜூன் மாதத்தின் வானிலை நிலவரம்?

கடந்த மே மாதத்தை போலவே இந்த ஜூன் மாத தொடக்கத்தில் 2 வாரங்கள் வானிலை ஈரப்பதத்துடன் காணப்படும், என்று சிங்கப்பூர் வானிலை சேவைமையம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் அதிகமான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக இந்த மாதத்தின் முதல் பாதியில் மழையின் அளவு இருக்கக்கூடும், மேலும் 6 – 8 நாட்கள் இடியுடன் கூடிய மழை காலை நேரத்தில் இறுதியிலும், மதிய வேளை தொடக்கத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் கூடுதல் தகவல் வெளியிட்டுள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை அதிகமான நாட்களில் 25 – 33 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், இரவு நேரங்களில் குறைவான வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.