சிங்கப்பூரில் மே மாதம் முழுவதும் வறண்ட வானிலை – சுமத்ரா சூறாவளியின் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை

Singapore weather report june
Pic: Unsplash

சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில் இருந்து அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி உள்ளதால் ,எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிகமான வெப்பநிலை மற்றும் வறண்ட வானிலையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று செவ்வாய்க்கிழமை (May 17) சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சுமார் 15 வார வானிலை கண்காணிப்பிற்கு பிறகு ,சிங்கப்பூரில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பருவமழையானது செப்டம்பர் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மே மாதத்தின் தொடக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை இருந்தபோதிலும், மே மாதத்தின் இறுதியில் இரவு நேரங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலையும் காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத் தொடக்கத்தில் 34 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிய வெப்பநிலை மே மாதத்தின் இறுதியில் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சுமத்ரா சூறாவளி காரணமாக சில நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 2022 மே மாதத்திற்கான ஒட்டுமொத்த மழைப்பொழிவு சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என்று வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் சுமத்ரா சூறாவளிக்கு வழிவகுத்தது.