பாவம் அந்த வாயில்லா ஜீவன்கள் எங்கு போகும் ? – சிங்கப்பூரில் விரிவுபடுத்வுள்ள நீர் சுத்திகரிப்பு ஆ

Photo: Jimmy Ng/Google Maps

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைகழகத்துக்கு அருகிலுள்ள நீர்ப்பிடிப்பு வளைப்பகுதியின் சில பகுதிகள் நீர் சுத்திகரிப்பு ஆலையை விரிவுபடுத்த அகற்றப்பட உள்ளன.

சிங்கப்பூரில் அதிகளவிலான வனவிலங்குகள்,தாவரங்கள் ஆகியவற்றைக் கொண்ட வனப்பகுதிகளில் அதுவும் ஒன்று என்பதால் அங்கிருக்கும் வனவிலங்குகள் பாதிப்படையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஆறு கால்பந்து மைதாங்களுக்கு சமமான பகுதிகள் அகற்றம் செய்யப்படும்.சுவா சூ காங் நீர் சுத்திகரிப்பு ஆலையை புதுப்பிக்க மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.

மிகவும் பழமையான இந்த ஆலை நீர்த் தேக்கங்களிலிருந்து பெறப்படும் நீரை சுத்திகரித்து நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் விநியோகிக்கிறது.

ஆலை விரிவுபடுத்தும் பணிகளுக்காக தற்போது உள்ள ஆலைக்கு தெற்குப்பகுதியில் உள்ள 3.2 ஹெக்டர் வனப்பகுதி அகற்றப்படும்.இதன் விளைவாக அப்பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வனவிலங்குகளின் உயிர் சேதம் போன்ற பாதிப்பு குறித்து கடந்த ஆண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது.இது தொடர்பான அறிக்கையை கழகம் அதன் இணையப் பக்கத்தில் கடந்த திங்கள்கிழமையன்று பதிவேற்றம் செய்தது.

வனத்தில் வசிக்கும் உயிரினங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும்,அப்பகுதியிலுள்ள இரண்டு நன்னீர் ஊற்றுகளும் பாதிப்படையும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.