“உங்க போட்டோ எல்லாம் அதுல இருக்கு” இளம்பெண்ணுக்கு வந்த மெசேஜ் – மோசடி கும்பலின் புதிய யுக்தி.!

Pic: Glennice Tong/TikTok

சிங்கப்பூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணான கிளனிஸ் டோங்குக்கு (Glennice Tong) அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், பெண் என சந்தேகிக்கப்படும் மற்றொரு இன்ஸ்டகிராம் பயனாளி ஒருவர் உங்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் தனியார் டெலிகிராம் தளத்தில் பகிரப்பட்டு வருகின்ற என அவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை கண்டதும் அந்த பெண் பதற்றமடைந்துள்ளார்.

முன்னர் தடை செய்யப்பட்ட எஸ்ஜி நாசி லெமாக் டெலிகிராம் தளத்தின் மறுவடிவமான இன்னொரு தளத்தில் உங்களின் ஆபாசமான புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன என அவர் எச்சரித்துள்ளார். கிளனிஸ் டோங்குக்கு மெசேஜ் அனுப்பிய அந்த இன்ஸ்டகிராம் பயனாளி நட்பார்ந்த முறையில் பேசியதாகவும், தனக்கும் அவ்வாறு நேர்ந்தது என்றும், அந்தத் தளம் பற்றி தான் புகார் அளித்திருப்பதாகவும் கிளனிசியிடம் அவ்வாறு நீங்களும் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

அதற்கு இணங்குவதுபோல் பேசிய கிளனிஸ், அந்தத் தளத்தைப் பற்றிய மேல் விபரங்களைக் கேட்டதும் அந்த இன்ஸ்டகிராம் பயனாளி அவருக்கு ஓர் இணையத்தள லிங்க்கை அனுப்பி அதில் சேர பரிந்துரைத்துள்ளார்.

முகநூல் பக்கம்போல தெரிந்த அந்த இணைப்பில் கிளனிஸ் டோங்கின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. பின்னர் அது ஒரு மோசடி என்பதை உணர்ந்த கிளனிஸ் டோங் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

மேலும், ஆபாசமான புகைப்படங்களை நான் எடுத்ததில்லை என கிளனிஸ் டோங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். பல பெண்களை இலக்காகக் கொண்டு செயல்படும் இந்த மோசடி குறித்து அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திருச்சி-சிங்கப்பூர் விமான வழித்தடம் எப்போதுமே மாஸ்… சிங்கப்பூர் சேவையில் சாதனை படைத்த “திருச்சி” – இந்தியாவிலேயே டாப்!