சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த தமிழருக்கு 37 ஆண்டு சிறை!

JUDGEMENT

சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு 37 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், வசந்தபுரியைச் சேர்ந்தவர் சோலை கணேசன். இவருக்கு வயது 38. திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், ஃபேஸ்புக் என்ற சமூக வலைத்தளம் மூலம் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஆரோக்கியமேரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறி திருமணம் செய்து நிலைக்கு சென்றுள்ளது.

இதையடுத்து, ஆரோக்கியமேரியைத் திருமணம் செய்துக் கொள்வதற்காக, கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் 25- ஆம் தேதி அன்று சோலை கணேசன் சிங்கப்பூர் சென்றார். அதைத் தொடர்ந்து, இருவரும் சிங்கப்பூரில் பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். திருமணத்தின் போதும் பெண் வீட்டாரிடம் ரூபாய் 72.85 லட்சத்தை வரதட்சணையாகப் பெற்றுள்ளனர் சோலை கணேசனின் குடும்பத்தினர். பின்னர், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

எப்பொழுது கையெழுத்தான உடன்பாடு? – அமலுக்கு வந்த சிங்கப்பூர் – பிரிட்டன் உடன்பாடு

இந்நிலையில், சோலை கணேசனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணமானது குறித்த விவரம், ஆரோக்கியமேரிக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியமேரி, கடந்த 2018- ஆம் ஆண்டு புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சோலை கணேசன் மீது புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், சோலை கணேசன் மற்றும் அவரது தாயார், சகோதரி, சகோதரர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான, வழக்கும் புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பான, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளி என்று நீதிபதி சத்யா நேற்று (14/06/2022) தீர்ப்பளித்தார். அத்துடன், அவர்களுக்கான தண்டனைகளையும் அறிவித்தார்.

“நிலாவே வா ” – நேற்று தோன்றிய சூப்பர் மூனை தவறவிட்டவர்களை அடுத்த மாதம் காண வரும் “Buck moon”

அதில், சோலை கணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 2.80 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உடந்தையாக இருந்ததற்காக சோலை கணேசனின் தாயார் ராஜம்மாளுக்கு 15 ஆண்டுகள் சிறையுடன் ரூபாய் 1 லட்சம் அபராதமும், அவரின் சகோதரி கமலஜோதிக்கு 15 ஆண்டுகள் சிறையுடன் ரூபாய் 1.80 லட்சம் அபராதமும், சகோதரர் முருகேசனுக்கு 16 ஆண்டுகள் சிறையுடன் ரூபாய் 1.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது சித்தப்பா நாராயணசாமிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.90 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.