வேலை அனுமதி புதுப்பிப்பு தகுதிகளை பூர்த்திசெய்ய தவறினாலும் 2 ஆண்டுகள் வரை வேலை அனுமதி.!

migrant worker lost money scammed
Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கப்பல் பட்டறை போன்ற துறைகளில் பணிபுரியும்
வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி இந்த ஆண்டுடன் காலாவதியாகி புதுப்பிப்புக்கான தகுதிகளைப் பூர்த்திசெய்ய தவறினாலும், அவர்களுக்கு வேலை அனுமதி 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனிதவள அமைச்சகம் கூறுகையில், வேலையில் இருப்பதற்கான கூடுதல்பட்ச காலத்தை எட்டுபவர்களுக்கும் மற்றும் வேலைக்கான வயது வரம்பை எட்டுபவர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவித்துள்ளது.

குறுகிய கால அனுமதி அட்டை வைத்திருப்போருக்கும் கொரோனா தடுப்பூசி!

வேலை அனுமதி வைத்திருப்போரில், 10 விழுக்காட்டினராவது உயர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையை நிறுவனங்கள் இனி பின்பற்ற தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் நிலைமையைச் சமாளிக்கும் விதமாக அரசு தற்போது இந்தச் சலுகையை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அத்தகைய துறைகளில் வேலை அனுமதி வைத்திருப்போரின் எண்ணிக்கை சுமார் 60,000 வரை குறைந்ததாகவும் மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் கட்டுமானம், கப்பல் பட்டறை போன்ற துறைகளில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் அதிகளவில் கிடைக்காததால், ஆசிய கட்டுமானத் துறையில் சிங்கப்பூர் 4வது இடம்