முதலாளிகள் அவசரத்துக்காக நாங்கள் உயிரை இழக்க வேண்டுமா? சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் சொல்லும் பகீர் தகவல்!

retrenchments-2024-increase-ntuc-measures

இது ஏற்கனவே தெரிந்த தகவலாக இருந்தாலும், எல்லோர் மனதிலும் உள்ள ஆதங்கம் இது தான். கொரோனா சூழலுக்கு பிறகு எங்குமே பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடை பிடிக்கப்படுவதில்லை.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய நேரத்தில், இன்னும் இரண்டு வேலை சேர்த்து முடிக்கலாம் என நிரபந்திக்கப்படுவதால், அபாயகரமான வேலை செய்யும் பணியாளர்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்றபற்றி இருந்தால் கணிசமான மரணங்களை தவிர்த்து உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது.

கிரேன் மீது அமரும்போது பாதுகாப்பு பெல்ட், உயரமான இடங்களில் வேலை செய்யும் போது பாதுகாப்பு கவசங்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டன.

ஊழியர்கள் அவற்றை அணியாததால் அல்லது அவை போதுமான இல்லாததால் மரணங்கள் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது.

பல கம்பெனி நிர்வாகங்கள் வேலையிடப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக வேலையை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்பதில் குறியாக உள்ளன.

ஊழியர்களும் அவசரமாக வேலைகளைச் செய்ய வேண்டி உள்ளது. பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்கின்றனர். இதனால் பாதுகாப்பு அடிபட்டுப் போகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் மிக வேகமாக வேலைகள் நடந்துவரும் இந்நிலையில், ஊழியர்களுக்கு வேலையிடப் பாதுகாப்பு குறித்து மீண்டும் பயிற்சி தேவை என்று சில நிபுணர்கள் கூறினர்.

அத்துடன் அந்தந்த வேலைகளுக்குத் தேவையான எண்ணிக்கையில் ஊழியர்கள் வேண்டும் என்றும் நிபுணர்கள் சொல்கின்றனர்.