பெட்ரோல் நிலைய ஊழியர் மரணம்… ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்திய சிங்கப்பூர் பணியிடப் பாதுகாப்பு மையம்

Pic: The Star

சிங்கப்பூர் பணியிடப் பாதுகாப்பு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூரில் பெட்ரோல் நிலையங்களை நடத்தி வரும் நிறுவனங்கள் அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த அறிவிப்பானது, செங்காங் ஈஸ்ட் (Sengkang East) ரோட்டில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்பும் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதை அடுத்து வெளியாகியுள்ளது. மேலும், விபத்து தொடர்பாக 42 வயது கார் ஓட்டுநரை காவல்துறை விசாரணை செய்துள்ளது.

ஜனவரி 2023இல் மட்டும் சிங்கப்பூரில் 3 பணியிட மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வேலையிட பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.