சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் ஊழியர் மரணம்; தொடர் மரணம்… அச்சத்தில் உறையும் வெளிநாட்டு ஊழியர்கள்

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் உயிரிழந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

வேலையிடத்தில் மரத்துண்டு திடீரென தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பயனில்லாமல் புதன்கிழமை (ஜூலை 13) உயிரிழந்தார்.

பயங்கரவாத மிரட்டல் அதிகம்… அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்

இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஏற்பட்ட வேலையிட இறப்புகளின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

பைல் லோட் சோதனையில் பயன்படுத்தப்பட்ட மரத்துண்டு உடைந்து ஊழியரை தாக்கியதாக MOM கூறியுள்ளது.

இந்த விபத்து கடந்த ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணியளவில் பாசிர் ரிஸ் டிரைவ் 1 இல் நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (ஜூலை 14) அறிக்கையில் தெரிவித்தது.

பொது போக்குவரத்தில் பிறப்புறுப்பை காட்டிய ஆடவர் – பல முறை அவ்வாறு செய்ததாக புகார்

உயிரிழந்த ஊழியர் ​​51 வயதான சிங்கப்பூரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஊழியர், அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காயங்கள் காரணமாக இறந்தார் என்றும் MOM கூறியுள்ளது.

MOM சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.