உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கப்பூரர் உட்பட 12 பேர் கொண்ட குழு – “நன்றி” தெரிவித்த சிங்கப்பூர் தூதரகம்

Wisma Putra/Facebook

ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, உக்ரைன் தலைநகரான கீவில் இருந்து 12 பேர் கொண்ட குழு வெளியேற்றப்பட்டனர். அதில் சிங்கப்பூரர் ஒருவரும் அடங்குவார்.

மேலும் அதில் ஒன்பது பேர் மலேசியர்கள் மற்றும் இரண்டு பேர் உக்ரைனியர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு ஊழியர்களை தூக்கிய போலீஸ் – பரபரப்பான விமான நிலையம்!

நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) காலை 5.45 மணிக்கு, அவர்கள் உக்ரைன் மற்றும் போலந்தின் கோர்சோவா-கிராகோவெட்ஸ் எல்லையை வந்தடைந்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள மலேசியத் தூதரகத்தின் இடைக்காலப் பொறுப்பாளர் திருமதி ஃபாதிலா தாவுத் தலைமையில் அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த கடினமான சூழ்நிலையில் அங்கிருந்து சிங்கப்பூரர் வெளியேற உதவியதற்காக மலேசிய வெளியுறவு அமைச்சகத்திற்கு “நன்றி” என்று கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகமும், ஜோகூர் பாருவில் உள்ள துணைத் தூதரகம் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளன.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு SHN, Travel History காலம் என்ன? – மேலும் நடப்பில் உள்ளதை அறிவோம்