இந்த வயசுல இவ்ளோ மதுபானம் அவசியமா? – சிங்கப்பூரில் வயதானோரிடம் அதிகமான குடிப்பழக்கம்!

சிங்கப்பூரில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.5௦க்கும் 59க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள் ஏழுநாட்களில் குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் மது அருந்துவதாக சுகாதார ஆய்வு தெரிவித்துள்ளது.

அதேசமயம் 18 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது வெவ்வேறு வகையான மதுபானங்களை அருந்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் மது அருந்தும் விகிதம் 2019 முதல் 2021 வரையிலான இடைப்பட்ட காலத்தில் எப்போதாவதும் மாற்றமின்றி நீடித்தது.நேற்று முன்தினம் வெளியான ஆய்வு முடிவுகளில், இந்தப் பழக்கம் கடந்த பத்து ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டன.

2020 முதல் 2021 வரை ஆய்வுகள் நடத்தப்பட்டன.18 வயது முதல் 74 வயது வரையிலான சிங்கப்பூர்வாசிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களின் விகிதம் 2.8,அடிக்கடி குடிப்பவர்கள் 11.3 சதவீதமும் இருப்பதாக ஆய்வில் உள்ள தகவல் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் எல்லா வயதுப் பிரிவினரிடமும் அதிகம் குடிக்கும் போக்கு 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.