OCBC வங்கியின் மற்றொரு வாடிக்கையாளருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் – 2 மணிநேரத்தில் வாழ்நாள் சேமிப்பு S$500,000ஐ இழந்த சோகம்

supervisory actions OCBC MAS

OCBC வங்கியின் மற்றொரு வாடிக்கையாளருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம், அவர் தனது வாழ்நாள் சேமிப்பு கணக்கிலிருந்து சுமார் S$500,000 பணத்தை மோசடியால் இழந்துள்ளார்.

இந்த மோசடி பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அத்துடன் OCBC வங்கியின் பலவீனமான பாதுகாப்பு அமைப்பு மற்றும் செயல்முறைகளை மேம்படுத்தவும் இந்த செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.

சாங்கி விமான நிலையத்தின் 2ம் மற்றும் 4ம் முனையங்கள் எப்போது திறக்கப்படும்?

அவர் பகிர்ந்து கொண்ட சம்பவம்

நான் 43 வயதான பொது ஊழியர். பாதிக்கப்பட்ட மற்றவர்களைப் போலவே, எனக்கும் OCBC வங்கியின் அதிகாரப்பூர்வ SMS போல ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில் இணையதளத்தை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது அல்லது எனது வங்கி கணக்கு மூடப்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

மோசடி நடந்த தேதியில், நான் வெளிநாட்டில் இருந்தேன் மற்றும் பணம் செலுத்துவதற்காக எனது OCBC கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினேன்.

எனது சில கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாததால் இது நம்பகத்தகுந்த SMS என்று நினைத்தேன். நான் வெளிநாட்டில் இருந்ததால் OCBC அந்த நேரத்தில் அவற்றைத் தடுத்துள்ளோதோ என்று கருதினேன்.

அந்த மோசடி குறுஞ்செய்தி SMS இணைப்பில் இருந்த இணையதளம் OCBC இணையதளத்தைப் போலவே இருந்தது.

ஆகவே, எனது உள்நுழைவு விவரங்களையும் எனது OTP எண்ணையையும் ஒருமுறை பகிர்ந்து கொண்டேன்.

அதன் பின்னர் மோசடி கும்பல் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளனர். அவர் வாழ்நாள் சேமிப்பு கணக்கிலிருந்து சுமார் S$500,000 பணத்தை இழந்தார்.

அந்த S$500,000-ஐச் சேமிப்பதற்காக அவர் சுமார் 20 ஆண்டுகால வாழ்க்கையைச் செலவிட்டுள்ளதாக மனக்குமுறலுடன் கூறியுள்ளார்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வாழ்நாள் உழைப்பை வெறும் 10 நிமிடத்தில் இழந்துவிடாதீர்கள்.

மகளிடம் தவறாக நடந்துகொண்ட கொடூர தந்தை: 42 மாத சிறை, ஆறு பிரம்படி விதிப்பு