பாலியல் உறவை வலுப்படுத்த உட்கொண்ட ஒரு பொருளால் ஏற்பட்ட விபரீதம்… பிறப்புறுப்பு, வாய், கைகளில் பாதிப்பு – உஷார்

singaporean-man-sex-enhancement-coffee
Photo courtesy of Jack

சிங்கப்பூரை சேர்ந்த 36 வயதான ஆடவர் ஒருவர் “பிரைம் கோபி பெஜுவாங் 3 இன் 1” (Prime Kopi Pejuang 3 in 1) என்ற பாலியல் ரீதியான மேம்படுத்தும் தயாரிப்பை உட்கொண்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாக் என்ற அவர் இது குறித்து மதர்ஷிப்பிடம் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தொழிற்ச்சாலை கட்டிடத்தில் இரசாயன கசிவு… “அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்” – எச்சரிக்கை செய்யும் SCDF

இதை உட்கொண்ட அவருக்கு ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஜாக் முதலில் பிரைம் கோபி பெஜுவாங்கை மே 25 அன்று நண்பகலில் அவரது நண்பர் மூலம் வாங்கினார். ஆண்மைக்குறைவு காரணமாக அதை அவர் முயற்சிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

அதை உட்கொண்ட அதே நாளில் மாலை 4 மணியளவில், அவரது உதடுகள் விசித்திரமாக இருப்பதை உணர ஆரம்பித்தார் அவர். பின்னர் படிப்படியாக, அவரது தோலில் பெரிய சிவப்பு புள்ளிகளும் தோன்ற ஆரம்பித்தன.

மேலும், அவர் வாயைச் சுற்றியும், கைகளிலும், பிறப்புறுப்புப் பகுதிகளிலும் எரிச்சல் மற்றும் அரிப்பு உணர்வுகள் அவருக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

அவரது உடலின் சில பகுதிகளில் குமிழி போன்ற பெரிய கொப்புளங்களும் வெடிப்புகளும் தோன்றின.

வலி ​​மற்றும் அரிப்பு தாங்க முடியாமல் கடந்த மே 25 அன்று அதிகாலை 3 மணிக்கு, சாங்கி பொது மருத்துவமனையின் (CGH) விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஜாக்.

அதனை தொடர்ந்து கடந்த மே 26 அன்று, இந்த தயாரிப்பு பற்றிய எச்சரிக்கையை சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) வெளியிட்டது.

குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள் – அதற்கான தீர்வுகள்!