வெளிநாட்டில் பெண்ணின் உள்ளாடையை திருடி மாட்டிக்கொண்ட சிங்கப்பூரர்

singaporean-man-steal-bra-on-cruise

தென் சீனக் கடலில் சென்றுகொண்டிருந்த வேர்ல்ட் ட்ரீம் சொகுசு கப்பலில் பயணித்த சிங்கப்பூரர் ஒருவர், மற்றொரு பயணியின் அறைக்குள் சென்று பெண்ணின் உள்ளாடையை திருடியதாகக் கூறப்படுகிறது.

நீதிபதி கோவ் கெங் சியோங் வெளியிட்ட எழுத்துப்பூர்வ தீர்ப்பின்படி, அத்துமீறி உள்சென்றது மற்றும் திருட்டு வேலையில் ஈடுபட்டதாக தலா ஒரு குற்றச்சாட்டை இங் கோக் வை எதிர்கொள்கிறார்.

போதைப்பொருளுடன் சிக்கிய 6 பேர் – இருவர் வெளிநாட்டினர்

அவர் பாதிக்கப்பட்டவரின் அறையின் பால்கனி வழியாக ஏறி உள்ளாடை மற்றும் அவரின் உடைமைகளை திருடியதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வெளியே இருந்த வெளிநாட்டுக் கப்பலில் அவர் அந்த குற்றத்தை செய்ததால், சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் இங் மீது குற்றப் பொறுப்பேற்க முடியாது என்று அவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இருப்பினும், நீதிபதி கோவ், அவரின் அந்த வாதங்களை நிராகரித்தார்.

சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தொடர்புடைய சிங்கப்பூரில் இருந்து இயக்கப்படும் சொகுசு கப்பலில் ஒரு குற்றம் நடந்தால், குற்றவாளியை நீதியின் முன் நிறுத்தும் திறனை சிங்கப்பூர் குற்றவியல் சட்டம் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

நீதிபதி எழுத்துப்பூர்வ தீர்ப்பின் முடிவில், இந்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இங் தண்டிக்கப்படலாம் என்றும் கூறினார்.

சிங்கப்பூரில் அனைத்து COVID-19 தடுப்பூசி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளது – அக்.10 முதல் அமல்