தானே தொலைந்து தானே வெளிவந்த சிங்கப்பூரர் – மலேசியாவின் காட்டுக்குள் சென்றவர் 12 மணிநேரத்திற்கு பின்னர் திரும்பினார்

singaporean missing malaysia forest police
கடந்த ஆகஸ்டு 13ஆம் தேதி மலேசியாவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிங்கப்பூரர் ஒருவர் 12 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.40 வயதான நியோ தியாம் மிங், மலேசியாவின் கோட்டா டிங்கியில் உள்ள குனுங் பான்டி பராட் வழியாக நடைபயணம் செய்து கொண்டிருந்தபோது அவர் தொலைந்து போனார்.
ஆகஸ்ட் 13 அன்று மாலை சுமார் 7 மணியளவில் மலேசியா அவசரகால பதில் சேவையை தொடர்பு கொண்டு தனது நிலையை தெரிவித்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசியாவின் வனத்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படை உட்பட, ராயல் மலேசியா காவல்துறையின் தலைமையில்,அவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த நாள் ஆகஸ்ட் 14 அன்று,பிற்பகல் 2 மணி நிலவரப்படி, தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நியோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காட்டுக்குள் தனியாக மாட்டிக்கொண்ட நியோ 12 மணிநேரத்திற்குப் பின்னர், தானே காட்டை விட்டு வெளியேறினார், ஆகஸ்ட் 14 அன்று மாலை 4:20 மணியளவில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.மலை அடிவாரத்தில் நியோ தானே ஒரு “உதவி கட்டுப்பாட்டு மையத்தை” அடைந்ததாக பெர்னாமா கூறியது.

காட்டிலிருந்து வெளியேறிய நியோ பாதுகாப்பான நிலையில் இருந்தார்.பின்னர் அவர் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மலேசியாவில் நடைபயணம் செல்ல விரும்புவோர், தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது வனத்துறையிலோ தங்கள் செயல்பாட்டைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.