திருமண நாளன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மனைவி; சுமார் $650,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு.!

Pic: YUSRY MAT IDRIS & NEGERI SEMBILAN FIRE AND RESCUE DEPARTMENT

சிங்கப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி சுற்றுலா பேருந்து ஒன்று மலேசியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சிங்கப்பூரை சேர்ந்த செரினா மாட் இட்ரிஸ் என்பவர் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

செரினா மாட் இட்ரிஸ் தம்பதியினர், அவர்களது திருமண நாளை கொண்டாட குடும்ப உறுப்பினர்களுடன் மலைப் பகுதிக்கு செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், செரினா மாட் இட்ரிஸ் மரணத்திற்கு இழப்பீடு கேட்டு அவரது கணவர் டிராவல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பேருந்து ஓட்டுனருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். கடந்த 2020ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

“வேலை இல்ல, கட்டுப்பாடுகள் பிடிக்கல, குடும்பங்களைப் பார்க்க” நாடு திரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள்… இது சிங்கப்பூர் ஊழியர்களுக்கு வாய்ப்பாக அமையுமா?

செரினா மாட் மரணத்தால், அவர் மூலம் கிடைக்ககூடிய வருமானம் கிடைக்காமல் போய்விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

செரினா மாட் இட்ரிஸ் பாலர் பள்ளியில் குழந்தை பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் உயிருடன் இருந்திருத்தல் இந்த ஆண்டு அவருக்கு ஊதியம் மற்றும் சம்பள உயர்வும் கிடைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது அவருக்கு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கும்போது இவை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரி தொகை கழிக்கப்பட்டு, அவரது ஆண்டு வருமானத்தை அடிப்படையாக கொண்டு செய்ரின மாட்டின் குடும்பத்திற்கு $522,228 இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டார்.

மேலும், செரினாவின் மத்திய சேமநிதி கணக்கிற்கு $103,953 இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக செரினாவின் குடுபத்திற்கு ஏற்பட்ட இதர செலவுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்: சாலையில் குட்டிக்கரணம் அடித்து தீ பற்றி கொடூர விபத்து – (காணொளி)