மலேசியாவில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்த சிங்கப்பூர் பெண்

Singaporean woman dies car accident Malaysia
Facebook/Malaysia Civil Defence Force

மலேசியாவின் கோலாலம்பூர், தெரெங்கானுவில் கடந்த ஜூன் 29 அன்று கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2 (East Coast Highway 2) வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கியதில் சிங்கப்பூர் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தெரெங்கானு போலீசாரிடம் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியானது.

ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தலைவலி கொடுக்கும் “மூட்டைப் பூச்சி” – தப்பிக்கும் எஸ்பிரிமெண்ட் சக்ஸஸ்!

இதில் 31 வயதான இங் ஷீ ஷின் BMW X5 காரை ஓட்டியுள்ளார், வாகனத்தில் முன்பக்க பயணியாக 28 வயதான கிளாரிசா நியோ லி சான் என்பவர் இருந்துள்ளார்.

அவர்கள் இருவர் மட்டுமல்லாமல், அவர்களின் மற்ற இரு நண்பர்களும் மதியம் 1 மணியளவில் கோலாலம்பூரில் இருந்து கோலா தெரெங்கானுவுக்கு புறப்பட்டபோது இந்த விபத்து நடந்துள்ளது.

பலத்த மழை பெய்ததாகவும், வாகனம் திடீரென சறுக்கி, உலோகத் தடுப்பு மீது மோதியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கார் சாலைத் தடுப்பில் மோதியதில் திருமதி நியோவுக்கு கடும் காயம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஹுலு தெரெங்கானு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் ஒருவர் மருத்துவமனையிலும், இருவருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் “பீர்”.. வேற லெவல் டேஸ்ட்டாம் – குடிமகன்கள் நச்