சிங்கப்பூரில் நடந்த சவாலில் 30 மணிநேரம் காரில் கை வைத்து, காரையே பரிசாக தட்டிச்சென்ற சிங்கப்பூர் ஊழியர்

Singaporean worker win Nissan car சிங்கப்பூரில் நடந்த சவாலில் 30 மணிநேரம் காரில் கை வைத்து, காரையே பரிசாக தட்டிச்சென்ற சிங்கப்பூர் ஊழியர்
Tan Chong International

Singaporean worker win Nissan car: சிங்கப்பூரில் நடந்த “Tan Chong Car Challenge” சவாலில் சுமார் 30 மணிநேரம் காரில் கை வைத்தப்படி இருந்த சிங்கப்பூர் ஊழியர் காரை பரிசாக தட்டிச்சென்றுள்ளார்.

சான் கோக் செங் என்ற 56 வயதுமிக்க அவர், சிங்கப்பூரில் சேவைப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

“மக்கள் ஏன் இவ்வளவு ரூடாக இருக்கிறார்கள்” – சிங்கப்பூர் வந்த சுற்றுலா பயணி கவலை

நிர்ணயிக்கப்பட்ட ஐந்து நிமிட இடைவெளிகளைத் தவிர, கொளுத்தும் வெயிலில் 30 மணிநேரம் நிற்பது என்பது எளிதானது அல்ல.

இறுதியில் அவரது விடா முயற்சிகள் அனைத்தும் பலனளித்தன, அவர் சுமார் $105,300 மதிப்புள்ள நிசான் கிக்ஸ் இ-பவர் பிரீமியம் காரை வீட்டிற்கு ஒட்டிச் சென்றார்.

தன் கணவனின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியை கண்டு அவரது மனைவி மிகவும் மகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அவர்களுக்கு 27 வயது மகனும் 24 வயது மகளும் உள்ளனர்.

பேஸ்புக்கில் வெளியான இந்த பதிவுக்கு பலர் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், இந்த வயதிலும் திடமாக இருந்ததற்கு ஆச்சரியத்தையும் பலர் வெளிப்படுத்தினர்.

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை