சிங்கப்பூரர்களுக்கு நிதியுதவி! – பொது வீடமைப்பு வீடுகளில் வசிப்போருக்கு ரொக்கத் தொகை!

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online

சிங்கப்பூரர்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து ரொக்கத் தொகை கிடைப்பதோடு அடுத்த ஆண்டு ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் நிதி ஆதரவும் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு சிங்கப்பூர்க் குடும்பமும் ஜனவரி மாதத்தில் 300 வெள்ளி மதிப்புடைய CDC பற்றுச்சீட்டைப் பெறவிருக்கின்றன.

சிங்கப்பூரில் பணவீக்கத்தினால் அதிகரிக்கும் செலவினங்களைச் சமாளிக்க அரசாங்கம் நிதி ஆதரவு வழங்குகிறது.மேலும்,சிங்கப்பூர் அரசாங்கத்தின் பொது வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஜனவரியில் அதிகபட்சமாக 95 வெள்ளி மதிப்புடைய U-Save பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

பற்றுச்சீட்டைக் கொண்டு பயனீட்டுக் கட்டணத்தில் தள்ளுபடி பெற்றுக் கொள்ள முடியும்.குறைந்த வருமானம் கொண்ட வயதானோருக்கு பிப்ரவரி மாதம் 300 வெள்ளி ரொக்கம் வழங்கப்படும்.

அதேவேளை, 55 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களும், 20 வயதும் அதற்கும் குறைவானவர்களும் அவர்களுடைய MediSave சேமிப்புக்கணக்கில் 150 வெள்ளி பெறவிருக்கின்றனர்.