உலகின் சிறந்த பார்டெண்டராக (Bartender), சிங்கப்பூரை சேர்ந்த பெண் தேர்வு !

Bannie Kang from Singapore has been named Diageo World Class Bartender of the Year 2019

உலகின் சிறந்த பார்டெண்டராக, சிங்கப்பூரை சேர்ந்த பேனி காங் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பார்டெண்டர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் நடைபெற்றது. இதில் விருந்தினர்களின் ரசனைக்கேற்ப மது வகைகளை முறையாக கலந்து கொடுப்பவரே பார்டெண்டர் போட்டியில் வெற்றி பெற்றவர் ஆவார். இவர்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டு தோறும் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த பார்ண்டெண்டர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், குறைந்த நேரத்தில் காக்டெய்ல் தயாரித்து அசத்திய சிங்கப்பூரைச் சேர்ந்த பேனி காங் வெற்றி பெற்றார்.