சிங்கப்பூரின் உள்நாட்டு ஏற்றுமதி சரிவு..!

சிங்கப்பூரின் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி (NODX) இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 9.6 சதவீதம் சரிந்துள்ளது என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அதிகாரப்பூர்வ தகவலை இன்று வியாழக்கிழமை (நவம்பர் 21) வெளியிட்டுள்ளது.

இது முந்தைய காலாண்டில் 14.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது என்றும் கூறியுள்ளது.

எண்ணெய் மற்றும் எண்ணெய் அல்லாத வர்த்தகம் இரண்டிலும் சரிவு ஏற்பட்டதன் காரணமாக, முந்தைய காலாண்டில் 2.2 சதவீதம் குறைந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் மொத்த வர்த்தகம் மூன்றாம் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 6.7 சதவீதம் குறைந்துள்ளது.

மின்னணு பொருட்களின் உள்நாட்டு ஏற்றுமதி முந்தைய காலாண்டில் 27.0 சதவீதம் சரிவைத் தொடர்ந்து, மூன்றாம் காலாண்டில் 25.0 சதவீதம் சரிந்துள்ளது.

Source : CNA