சிங்கப்பூரில் வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை உயர்வு – வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

(PHOTO: Roslan Rahman / AFP)

சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் என்பது 1.9% ஆகக் குறைந்துள்ளது.

அதே சமயம் குடியிருப்பாளர்கள் வேலையின்மை மற்றும் குடிமக்கள் வேலையின்மை விகிதம் முறையே 2.7% மற்றும் 2.8% ஆகவும் குறைந்துள்ளது.

“உரிமம் இல்லாத ஊழியர்கள், பாதுகாப்பற்ற இயந்திரங்கள்…” – வரிசையாக சிக்கும் நிறுவனங்கள் – MOM அதிரடி ஆக்சன்

மனிதவள அமைச்சகம் (MOM) மாதாந்திர வேலையின்மை நிலைமை குறித்த அறிக்கையை வெளியிட்டது. மேற்கண்ட மூன்று விகிதங்களும் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் ஆகஸ்டில் குறைந்துள்ளன.

அதாவது கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சுமார் 64,800 குடியிருப்பாளர்கள் வேலையில்லாமல் இருந்தனர். அவர்களில் 57,600 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் (citizens). மற்றவர்களில் வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குவர்.

சிங்கப்பூரர்கள் வேலையில்லாமல் இருப்பது வெளிநாட்டு ஊழியர்களை பாதிக்குமோ என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் பொதுவாக நிலவிவருகிறது.

இருப்பினும்,வேலையின்மை விகிதம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட தற்போது குறைவாக உள்ளது என்று MOM தெரிவித்துள்ளது.

உற்பத்தி குறைவு, உயரும் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு ஆகியவை தொழிலாளர் சந்தையின் செயல்பாட்டைக் குறைப்பதாகவும் MOM கூறியுள்ளது.

பயணிகளுக்கு இன்பச் செய்தி..! சாங்கி விமான நிலைய முனையம் 2 மீண்டும் திறப்பு