காய்கறிகளால் மிகப்பெரிய ரங்கோலியைச் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

Photo: Indian Heritage Centre Official Facebook Page

சிங்கப்பூரில் கேம்ப்பெல் பாதையில் (Campbell Lane) அமைந்துள்ளது இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre). இங்கு தீபாவளி, பொங்கல் உள்ளிட்டப் பண்டிகைகள் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன், கண்காட்சி மற்றும் காட்சி அரங்கமும் அமைக்கப்படும். இதனை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers) மட்டுமின்றி சிங்கப்பூரர்களும், இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வந்து கண்டு ரசிப்பார்கள்.

அந்த மனசுதான் சார் கடவுள்… இலவசமாக பானங்களை வழங்கி மனதைக் கவர்ந்துள்ள மலாய் உணவுக் கடைக்காரர்!

அந்த வகையில், கடந்த ஜனவரி 15- ஆம் தேதி அன்று பொங்கல் பண்டிகை இந்திய மரபுடைமை நிலையத்தில் கொண்டாடப்பட்டது. கரகாட்டம், காவடி ஆட்டம் போன்ற தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது. அதேபோல், பொங்கலிடுவது எப்படி? பொங்கல் பண்டிகை குறித்த சிறப்புகள், மாட்டு தொழுவம் உள்ளிட்டவைத தத்ரூபமாக இந்திய மரபுடைமை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஜனவரி 15- ஆம் தேதி அன்று இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே உள்ள சாலையில் சுமார் 6 மீட்டர் அளவிற்கு கத்தரிக்காய், பூசணிக்காய், கேரட், வெண்டைக்காய், அவரைக்காய், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், காலிஃபிளவர், வெள்ளைப் பூண்டு, முட்டைகோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளைக் கொண்டும், சம்மங்கி, ரோஜா உள்ளிட்டப் பூக்களைக் கொண்டும், பழங்கள், வெல்லம், அரிசி, பருப்புகளைக் கொண்டும் மிகப்பெரிய பிரம்மாண்டமான ரங்கோலியை 200- க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், வீட்டுப் பணியாளர்களும் செய்துள்ளனர்.

Photo: Indian Heritage Centre Official Facebook Page

இந்த மிகப்பெரிய ரங்கோலி சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (Singapore Book of Records) இடம் பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ்களையும், அதன் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். மேலும், சிங்கப்பூரின் ரங்கோலி பயிற்சியாளர் விஜயா மோகன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஜன.28- ஆம் தேதி அன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி!

நிகழ்ச்சி முடிவில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அந்த காய்கறிகள், பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த தகவலை இந்திய மரபுடைமை நிலையம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.