வேலைக்காக ஊழியர்கள் செல்ல விரும்பும் நாடுகளில் சிங்கப்பூர் 8வது இடம்!

Job hire more foreign workers School bus operators spore
(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

தங்களுடைய வேலைக்காக ஊழியர்கள் செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும். இந்த உலகளாவிய ஆய்வு கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வங்கி ATM அட்டை இனி வேண்டாம் – முகத்தை ஸ்கேன் செய்து உங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம்!

190 நாடுகளை சேர்ந்த சுமார் 2,08,000க்கும் அதிகமானோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது ஒருபுறமிருக்க குறைவான சிங்கப்பூரர்களே வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு 24வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் தற்போது 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டில் இடம் மாற விரும்பும் ஊழியர்களின் விருப்ப இடமாக சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் மாறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த இரு நாடுகளிலும், கிருமித்தொற்று கையாண்ட விதம், மேலும் குறைவான இறப்பு விகிதம் ஆகியவை முக்கிய காரணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் நம்பிக்கையுடன் நிறுவனங்கள்… வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்!