ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லை! – சிங்கப்பூர் மருத்துவமனைகலில் படுக்கை மற்றும் செவிலியர் பற்றாக்குறை!

(PHOTO: KHOO TECK PUAT HOSPITAL/FACEBOOK)

சிங்கப்பூரில் தனியார் மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளைப் போலவே,படுக்கை பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்கின்றன.தனியார் மருத்துவமனைகளில் எல்லா வார்டுகளும் செயல்படும் அளவிற்குப் போதுமான மனிதவளமும் இல்லை.எனவே,அறுவை சிகிச்சை செய்வதில் காலதாமதம் ஏற்படுகின்றன.

மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை அறை காலியாக இல்லாததால் எலும்பு முறிவு நோயாளி ஒருவரை அரசாங்க மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறியதாக மருத்துவர் கூறினார்.

பிரசவ வார்டுகளைப் பொறுத்தவரை கவலை இல்லை என்று கூறப்பட்டாலும்,சில பெண்கள் அறுவை சிகிச்சைக்கு மூன்று மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஒரு சில மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை அறைகள் இருந்தாலும் அவற்றில் பணிபுரிய போதுமான செவிலியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.எனவே,எல்லா வார்டுகளிலும் உள்ள நோயாளிகளைக் கவனிக்க முடியவில்லை.

இது போல சிங்கப்பூரின் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.பொது மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை பிரச்சினை பெருமளவில் எதிர்கொள்ளப்படுகிறது.