இனி சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனைகளில் இப்படித்தான்! – அசத்தலான தொழில்நுட்பம் ;அடுத்த ஆண்டு அறிமுகம்

Covid-19 பெருந்தொற்றுப் பரவல் பல்வேறு நாடுகளில் தணிந்து வரும் நிலையில் சிங்கப்பூரில் தொற்று பற்றிய கவலை இன்னும் தொடர்கிறது.இந்நிலையில் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளைக் காணவரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகத் தயாராக இருக்கிறது.
ஆம்,மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்கச் செல்வோர் இனி நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.இந்தப் புதிய தொழில்நுட்பம் சிங்கப்பூரின் தற்போதைய சூழலுக்கு மிக அவசியமானதாகும்.
பார்வையாளர்களின் முகத்தை வைத்து அனுமதி செய்யும் புதிய முறை நடைமுறைக்கு வரவிருக்கிறது.பார்வளையாளர்களை அடையாளம் காணுதல்,அவர்களின் உடல்வெப்ப நிலையை சோதனைச் செய்தல் போன்றவற்றிற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கவலை இனி இல்லை.
இந்தக் கருவியின் மூலம் பார்வையாளரின் உடல்வெப்பம் மற்றும் முகத்தைப் படம் பிடித்து அடையாளம் வைத்துக் கொள்வது போன்றவற்றை விரைவில் செய்து முடிக்கலாம்.தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த கேமரா சரி என்று சொல்லிவிட்டால் நேராக நோயாளியின் படுக்கைகள் உள்ள பகுதிக்கு சென்று விடலாம்.
பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.எதிர்வரும் ஆண்டு சிங்கப்பூரின் அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல SingHealth மருத்துவமனைகளில் அந்தப் புதிய தொழில்நுட்ப செயல்பாடு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோயாளிகளைப் பார்க்கச் செல்ல விரும்புபவர்கள் SingPass செயலியில் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்துவிட்டால் போதுமானது.