இனி வரிசையில் நிற்கவேண்டியதில்லை: மருத்துவமனைகளில் முகங்களை ஸ்கேன் செய்யும் புதிய முறை

Photo: Tan Tock Seng Hospital Official Facebook Page

ஊட்ரம் சமூக மருத்துவமனை (OCH) மற்றும் சிங்ஹெல்த் டவர் ஆகியவற்றில் நோயாளிகளைப் பார்க்க செல்லும் நபர்கள் இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

பதிவு செய்ய வரிசையில் நிற்காமல், மருத்துவமனை வார்டுகளுக்குள் நுழைவதற்கு முன்னர் தங்கள் முகங்களை சாதனத்தின் மூலம் ஸ்கேன் செய்து உள்ளே நுழையலாம்.

இடிந்து விழுந்த தொங்கு பாலம்… 140 க்கும் மேற்பட்டோர் பலி – பதைபதைக்கும் CCTV காட்சி

மேலும், SingHealth மற்றும் Integrated Health Information Systems (IHiS) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பைப் பயன்படுத்தி, நீங்கள் வருகைக்கு முன்னதாக உங்களை ஆன்லைனில் பதிவும் செய்து கொள்ளலாம்.

இந்த முன்பதிவு செயல்முறையின் ஒரு பகுதியாக நீங்கள் ஒரு செல்ஃபி புகைப்படத்தை அதில் பதிவேற்ற வேண்டும்.

SingPass க்காக அரசாங்க தொழில்நுட்ப நிறுவனம் (GovTech) உருவாக்கிய முக சரிபார்ப்பு முறையை அது பயன்படுத்துகிறது.

கிளப்பில் இருந்த பெண்களை தொட்டு சீண்டியதாக இளைஞர் கைது (Video)