கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க! – Singpass சேவையில் ஏற்பட்ட கோளாறு!

singpass digital sign
Photo Credit : GovTech

சிங்கப்பூரில் CDC பற்றுச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் Singpass சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.பயனர்கள் பலரும் Singpassஐப் பயன்படுத்தி CDC பற்றுச்சீட்டுகளைப் பெற முயற்சி செய்த போது தடங்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பயனர்களிடமிருந்து புகார்கள் குவிந்ததை அடுத்து பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சிப்பதாக அமைப்பு, Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் தெரிவித்தது.CDC பற்றுச் சீட்டுகளைப் பெற முயற்சிக்கும் பயனர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

Singpass சேவையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதால் பற்றுச்சீட்டுகளைப் பெறுவதில் சிரமம் உள்ளது.எனவே,CDC பற்றுச்சீட்டுகளைப் பெற பின்னர் மீண்டும் முயற்சி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அதிகமானோர் CDC பற்றுச்சீட்டுகளைப் பெற முற்பட்டதால், சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக Singapore Atrium Sale முகநூல் பக்கத்தில் கூறியது.பொறுமையை இழந்த பயனர்கள் பலரும் அந்தப் பதிவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.பதிவிக்குக் கீழ் அவர்களது ஆதங்கத்தை கருத்துக்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.