அஞ்சல் கட்டணத்தை உயர்த்தப்படவிருப்பதாக ‘சிங்போஸ்ட்’ அறிவிப்பு!

அஞ்சல் கட்டணத்தை உயர்த்தப்படவிருப்பதாக 'சிங்போஸ்ட்' அறிவிப்பு!
Image via Google Maps

 

சிங்போஸ்ட் (SingPost) எனப்படும் சிங்கப்பூர் அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அஞ்சல் சேவையைப் பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் 09- ஆம் தேதி முதல் உள்நாட்டு அஞ்சல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, அஞ்சல் கட்டணம் 20 காசுகள் உயர்த்தப்படும். தற்போது 31 காசாக இருக்கும் அஞ்சல் கட்டணம் 51 காசாக உயர்த்தப்படும்.

வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது – தெரிந்துகொள்ளுங்கள்

இதற்கு முன் கடந்த 2014- ஆம் ஆண்டு அஞ்சல் தலைக் கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அப்போது, 22 காசாக இருந்த அஞ்சல் கட்டணம் 30 காசாக உயர்த்தப்பட்டது. இதுவே கடைசி கட்டண உயர்வு ஆகும்.

இந்த நிலையில், அதிகரித்து வரும் செலவினங்களை சமாளிக்கும் வகையில் அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் 10 அஞ்சல் தலைகளைக் கொண்ட ‘ஃபர்ஸ்ட் லோக்கல்’ (First Local) அஞ்சல் தலைத் தொகுப்பை (Stamp Booklet) சிங்போஸ்ட் வழங்கும்.

“ஊழியரின் திருமணத்திற்காக புதுக்கோட்டை வந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர்”- அரசுப் பள்ளிக்கு நன்கொடை வழங்கி அசத்தல்!

அஞ்சல் கட்டண உயர்வு தொடர்பான விரிவான தகவல்களுக்கு http://www.singpost.com/ratechange2023 என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பார்க்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.